வெள்ளத்தில் காணாமல்போன மாணன் சடலமாக மீட்பு

வெள்ளத்தில் காணாமல்போன மாணன் சடலமாக மீட்பு

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருந்த சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குருவத்தோட்ட - நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி காணாமபோனதாக கூறப்பட்டிருந்தது.

Srilanka Flood

இந்நிலையில் அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர கிராமசேவர் பிரிவில் 17 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.

மாணவரின் சடலம், ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அங்குருவத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.