பல தடவைகள் மழை பெய்யும் ; இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

பல தடவைகள் மழை பெய்யும் ; இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் தி​ணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தடவைகள் மழை பெய்யும் ; இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Today Weather In Srilanka To Northen Province

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் தி​ணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.