விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணம் வழங்க தீர்மானம்
4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பரசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாற்றுகளை நடுவதற்கு இந்த பரசூட் டிஸ்க்குகளை பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நெல் சாகுபடிக்கு பரசூட் டிஸ்க்குகளை பயன்படுத்தினால் அதிக பலனை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.