மழையுடனான வானிலை இன்று தொடரும் ; இன்றைய வானிலை

மழையுடனான வானிலை இன்று தொடரும் ; இன்றைய வானிலை

தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்று வலுவடைந்து காணப்படுவதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையும் மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கூறியுள்ளார்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுவதுடன், வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலை இன்று தொடரும் ; இன்றைய வானிலை | To Day Weather In Srilanka To Tamil News Northen

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.