மதுபானம் அருந்தியதால் பறிபோன உயிர்கள்: விசாரணைகள் தீவிரம்

மதுபானம் அருந்தியதால் பறிபோன உயிர்கள்: விசாரணைகள் தீவிரம்

தம்புள்ளை (Dambulla) பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது, தம்புள்ளை விகாரை சந்தி பகுதியில் இருந்து பதிவாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டவிரோத மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாகவும் இன்று அதே மதுபானத்தை அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும், சில காலமாக நடைபெற்று வரும் இந்த சட்டவிரோத மதுபான விற்பனை மோசடியால் பிரதேசவாசிகள் தற்போது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைக்கு மேலதிகமாக, தடயவியல் அறிக்கைகளை வரவழைத்து அவர்களின் மரணத்திற்கான குறிப்பிட்ட காரணங்களைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மதுபானம் அருந்தியதால் பறிபோன உயிர்கள்: விசாரணைகள் தீவிரம் | Four People Died After Drinking Illegal Liquorசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.