வெளிநாட்டிலிருந்து வந்த மரப்பெட்டியால் இளைஞன் மரணம்

வெளிநாட்டிலிருந்து வந்த மரப்பெட்டியால் இளைஞன் மரணம்

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப்பெட்டியால் வாழைச்சேனையில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மரப் பெட்டியை லொறியில் இருந்து இறக்கும் போது தவறி விழுந்ததில் இளைஞன் ஸ்தலத்திலேயே மரணடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த மரப்பெட்டியால் இளைஞன் மரணம் | A Young Man Died Of A Wooden Box From Abroad

மரணமடைந்த இளைஞன் பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகம்மது றிமாஸ் என்பவராவார்.

இளைஞனின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.