வெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் இலங்கைக்கு வருகை
வெளிநாட்டு கடற்படையினர் 111 பேர் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதன்படி சென்னையிலிருந்து இண்டிகோ எயர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் 77 இந்திய கடற்படையினர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். விமானத்தில் விமானிகள் உட்பட 6 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
இதேநேரம் தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக 32 வெளிநாட்டு கடற்படையினரும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் இரண்டு கடற்படையினர் அபுதாபியில் இருந்து எடிஹாட் எயர்ர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்த அனைத்து கடற்படையினரும் விமான நிலையங்களில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.