ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் (Ebrahim Raisi) மரணத்தில் உள்நாட்டு சதி இருக்கலாம் என புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“ஈரானிய ஜனாதிபதி பயணித்த உலங்கு வானூர்தியின் கறுப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு மறைக்கப்பட்டுள்ளமையானது இது ஒரு திட்டமிடப்பட்ட சதி என்பதை தெளிவுப்படுத்துகின்றது.

குறித்த உலங்கு வானூர்தியுடன் பயணித்த மற்றைய உலங்கு வானூர்திகளில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளே இதை திட்டமிட்டு செய்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” எனக் கூறியுள்ளார்.