வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக கணவனின் விபரீத முடிவு

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக கணவனின் விபரீத முடிவு

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வர போதிய பணம் இல்லாததால் மனம் உடைந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலம் கிரம ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை, மாத்தர ஹேவகே பியதிலக என்ற 52 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவியான நிலானி மூன்று மாதங்களுக்கு முன்பு குவைத் சென்றுள்ளார். ஆனால் அவரால் அங்கு வேலை செய்வது கடினம் என தொழில் வழங்கிய வீட்டு உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் பல வீடுகளில் வேலை செய்தாலும், அந்த வீடுகளில் வேலை செய்வது கடினம் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக கணவனின் விபரீத முடிவு | Wife In Abroad Husband Death

இதன் காரணமாக மனைவியை இலங்கைக்கு அழைத்து வர அவரது கணவர் முயற்சித்ததாகவும், ஆனால் முகவர் நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கேட்டதாக தெரியவந்துள்ளது.

அந்த பணத்தை கண்டுபிடிக்க தந்தை கடுமையாக முயற்சித்துள்ளார். வீட்டுக் காணியை அடமானம் வைத்து, கடன் வாங்க முயன்றும் தோல்வியடைந்துள்ளார். இதனால் தந்தை மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தங்காலை வீரகட்டிய வீதியில் தங்கெட்டிய பிரதேசத்தில் கிரம ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டில் இருந்து ஒருவர் கிரம ஓயாவில் தவறி விழுந்ததாக தங்காலை தலைமையக பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

பொலிஸாரும் பிரதேசவாசிகளும் காணாமல் போனவரைத் தேடியபோது நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வெளிநாட்டிலுள்ள மனைவிக்காக கணவனின் விபரீத முடிவு | Wife In Abroad Husband Death

கண்டெடுக்கப்பட்டவரின் சடலம் தமது தந்தையுடையது என மகள்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.