ஹைதராபாத் அணியை மிரள வைத்த கொல்கத்தா அணி: இறுதி போட்டியில் அபார வெற்றி
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியனாக மாறியுள்ளது.
குறித்த போட்டியானது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
அதன்படி, இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதனைதொடர்ந்து, தலில் துடுப்பாட்டம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து.113 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஹைதராபாத் அணிக்கு எதிரான 114 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 10 ஓவர்கள் 3 பந்துகளில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அந்த இலக்கை எட்டி சாம்பியனாக மாறியது.
இதேவேளை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இந்த வெற்றியினால் அணியின் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பை வென்ற இந்திய அணித்தலைவர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இதுவரையில் இரண்டு ஐ.பி.எல் கோப்பைகளை வென்றிருந்த கொல்கத்தா அணி தற்போதைய வெற்றியுடன் மூன்று கோப்பைகளை சுவிகரித்துள்ளது.