பதுளையில் வெசாக் வலயத்திற்குள் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
வெசாக் வலயத்திற்கு மின்சார திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 50 வயதுடைய ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை - கபுகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விகாரையொனறில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்திற்கு மின்சாரம் வழங்க முற்பட்ட போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கெப்பித்திகொல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.