ஒளிக்கு நிறை கிடையாது என எப்போது விஞ்ஞானிகள் ஊகித்தனர்?

ஒளிக்கு நிறை கிடையாது என எப்போது விஞ்ஞானிகள் ஊகித்தனர்?

ஒளி போன்ற அலைகளுக்கான சமன்பாட்டை மாக்ஸ்வெல் உருவாக்கும் வரை எந்தவொரு நிபுணர்களும் மின்காந்தப் புலத்துக்கு நிறை இருக்காது என்பதை நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த மாக்ஸ்வெல் சமன்பாடுகள் குவாண்டம் கொள்கையுடன் சேர்த்து விளக்கம் பெற்றன.

அதாவது ஒளியின் குவாண்டம் போட்டோன் எனப்பட்டது. ஒளி போன்ற மின்காந்த அலைகள் துணிக்கைக்கான தன்மை மற்றும் அலைக்கான தன்மை ஆகிய 2 ஐயும் வெளிப்படுத்துபவை ஆகும். ஆயினும் சிறப்புச் சார்புக் கொள்கைப் படி ஒளியின் வேகம் அதன் அலை நீளத்தில் தங்கியிருக்காது என்றும் இது வெற்றிடத்தில் எப்போதும் மாறிலி என்றும் விளக்கப் பட்டது.

மாக்ஸ்வெல்லின் தூய கலப்பற்ற கோட்பாடுகள் நிறையற்ற அலைகளது இயல்பை மாத்திரமே விளக்கிய போதும், பின்பு இதற்கு மாற்றான கொள்கையும் உருவானது. அதாவது 1930 ஆமாண்டு இறுதியில் அணுப் பௌதிகவியலில் மெசொன்ஸ் என்ற நிறை கொண்ட துணை அணுத்துணிக்கை தொடர்பான கோட்பாடுகள் ரோமானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரு ப்ரொக்கா என்பவரால் உருவாக்கப் பட்டு மாக்ஸ்வெல்லின் பழைய சித்தாந்தத்துடன் இணைத்து புதிதாக மாக்ஸ்வெல் - ப்ரொக்கா கொள்கை என்ற கொள்கை ஒன்று உருவாக்கப் பட்டது.

எனவே பௌதிகவியலில் அல்லது பௌதிக இலக்கியத்தில் 1930 இன் பின்பகுதியில் தான் நவீன நிறை கொண்ட மற்றும் நிறை அற்ற புலங்களுக்கான கொள்கைகளும் அவற்றுடன் தொடர்புடைய குவாண்டாக்களும் விருத்தி செய்யப் பட்டவை என்று கூற முடியும்..

நன்றி, தகவல் - Quora