இலங்கை பெண்களின் வங்கி கணக்கு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

இலங்கை பெண்களின் வங்கி கணக்கு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

தெற்காசியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் பெண்களின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் பெண்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் எண்ணிக்கையானது 89 சதவீதம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் கணக்கு வைத்திருப்பவர்களின் சராசரி 65.8% ஆகவும், இலங்கையில் இந்த எண்ணிக்கை 89.3% ஆகவும் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி(CBSL) தெரிவித்துள்ளது.

மேலும், பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதே வருமானம் கொண்ட 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர் கணக்கு வைத்திருப்பவர்களின் சதவீதம் இலங்கையில் அதிகமாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் 15 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 89% பேர் ஏதேனும் ஒரு வங்கி கணக்கை வைத்துள்ளனர். இது தெற்காசிய நாடுகளில் 68சதவீத எண்ணிக்கையை காட்டுகிறது.

இலங்கை பெண்களின் வங்கி கணக்கு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு | Average Female Bank Account Holders In South Asia

குறைந்த நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் எண்ணிக்கையானது 62 சதவீதமாக காணப்படுகிறது.

இதன்படி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் கணக்கு வைத்திருப்பவர்களில் எண்ணிக்கையில் 32 சதவீத மக்கள் சம்பளம் அல்லது அரசாங்கப் பணம் பெற முதலில் கணக்கைத் திறந்துள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது.