வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம்

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டம்

அஸ்வெசும (Aswesuma) திட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள் பலர் பங்கெடுக்காததால் குறித்த செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டத்தை வடக்கு மாகாணத்தில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வடக்கு மாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்காத காரணத்தினால் இரண்டாம் கட்ட நிவாரணப் பணிகளை ஆரம்பிப்பது குறித்து நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தற்போது இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை அனுப்பியவர்களின் தகவல்களை சரிபார்க்கும் பணியில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணும் வரை அரசின் மானிய திட்டத்தில் சேர மாட்டோம் என கிராம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

second-phase-of-aswesuma-project-northern-province

இரண்டாம் கட்டத்தின் கீழ் 4.5 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதோடு 24 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணப் பலன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.