தென்னிலங்கையில் பயங்கரம்... சகோதரன் உதவியுடன் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

தென்னிலங்கையில் பயங்கரம்... சகோதரன் உதவியுடன் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

அம்பாந்தோட்டை - பெலியத்த கொஸ்கஹகொட பகுதியில் கணவனை விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பயங்கரம்... சகோதரன் உதவியுடன் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி! | Wife Killed Her Husband Brother Helped Sri Lanka

கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான, உயிரிழந்தவரின் மனைவிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவரது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் பயங்கரம்... சகோதரன் உதவியுடன் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி! | Wife Killed Her Husband Brother Helped Sri Lanka

தனது கணவரின் மது கோப்பையில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக மனைவி பெலியத்த பொலிஸாலிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.