மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தற்கொலையா..

மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தற்கொலையா..

கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாணவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இளைஞன் வீழ்ந்துள்ளார்.​​

மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவன் பலி; தற்கொலையா? | Student Dies After Falling From Flyover Suicide

மாத்தறை நோக்கிச் சென்ற காரில் இளைஞன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்க பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், கார் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.