வெளிநாட்டில் கருக்கலைப்பு செய்த இரு இலங்கையர்கள் கைது
சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் இபராகி பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண்ணொருவரும் கருக்கலைப்புக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் அவரது காதலனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத கருக்கலைப்பின் போது குறித்த பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அன்று தனது காதலனின் வீட்டில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி மகப்பேறு தொடர்பான வைத்தியரொருவரை சந்தித்துக் கருக்கலைப்பு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜப்பான் சட்டத்தின் கீழ் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்துவிட்டதால் கருக்கலைப்பு செய்ய முடியாது என வைத்தியர் கூறியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.