யாழ்ப்பாணத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது!

யாழ்ப்பாணத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது!

யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்றையதினம் (24-05-2024) யாழ் மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண் அதிரடி கைது! | Woman Was Arrested Sale Of Liquor In Jaffna Kopay

போயா தினமான இன்று மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் கசிப்பு வியாபாரத்தில் பெண்ணொருவர் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.