84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் களமிறக்கம்

பொதுத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.