
தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் வேட்டை தொடரும்.. ஜனாதிபதியின் விருப்பமும் இதுவே
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் மோசடிகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்குவதேஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் விடயங்களிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்ற ஜனாதிபதி விரும்புகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்த நாடாக இலங்கை இருக்கும் என்றும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்தார்.