அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை....!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 21 பேர் குணமடைந்துள்ளனர்.

தேசிய தொற்று நோய்த் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான 2 ஆயிரத்து 317 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரையில் 2 ஆயிரத்து 810 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் கொவிட்-19 தொற்றுறுதியான 482 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக பணியாற்றிய ஒருவருக்கு இரண்டாது முறை மேற்கொண்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையின் போது அவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

எனவே அவர் தொடர்பினை பேணிய அம்பாறை - ஹிங்குரான - முவன்கோல பகுதியை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எனினும் அதில் எவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகவில்லை என அம்பாறை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இன்று இதுவரையில் யாருக்கும் கொவிட்19 தொற்றுறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.