லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி விடுத்துள்ள எச்சரிக்கை!
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், விமானத்துறையை மீண்டும் தொடங்க முடியாவிட்டால் பிரித்தானியாவில் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கலாம் என்று லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது சில புதிய விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் அரசாங்கம் பொது மக்களுக்கு சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. இதற்கிடையில், பிரித்தானியாவுக்கு வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்துதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உள்நாட்டு சுற்றுலாவை அழிக்கும் மற்றும் ஏற்றுமதியை சேதப்படுத்தும் என்று மிகப்பெரிய விமான நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான பிரித்தானியா அரசாங்கம் பிடிவாதமாக அமுல்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில் தான் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி அதிகாரியான ஜான் ஹாலண்ட்-கேய் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,
நாம் ஒரு நாடாக இவ்வாறு செல்ல முடியாது. எல்லைகளை மீண்டும் திறக்க நாம் திட்டமிடத் தொடங்க வேண்டும். மிகவும் பாதுகாப்பான முறையில் விமானத் துறையை மீண்டும் விரைவாக இயக்காவிட்டால், நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான வேலைகளை இழக்க நேரிடும் என்று எச்சரித்தார்.