வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விபத்து : சிறுவன் பலி

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விபத்து : சிறுவன் பலி

முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு  பகுதியில் உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று (20) மாலை 6.30 மணியளவில் தேராவில் வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் (Vattrāppalai Kannaki Amman Kōvil) ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில் கிளிநொச்சி (Kilinochchi)- தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் உழவு இயந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாகச் சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று புரண்டு உள்ளது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விபத்து : சிறுவன் பலி | 1 Killed 5 Injured Iaccident In Mullaitivuஇந்த விபத்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

மேலும் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் விபத்து : சிறுவன் பலி | 1 Killed 5 Injured Iaccident In Mullaitivuஉயிரிழந்த சிறுவனின் சடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.