சரியும் வெங்காயத்தின் விலை

சரியும் வெங்காயத்தின் விலை

நாட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளது. இதனால் வெங்காய இறக்குமதியாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி வரம்பை இந்தியா நீக்கியதால், அதிக அளவில் பெரிய வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளதாக அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சரியும் வெங்காயத்தின் விலை | Falling Onion Prices Srilanka

இதுதவிர கடந்த காலத்தில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த கட்டுப்பாட்டுடன் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 700 ரூபாவாக அதிகரித்தது.

இதன் காரணமாக சீனாவில் இருந்தும் பெரிய வெங்காயத்தை அரசாங்கம் இறக்குமதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.