இலங்கையில் பணத்திற்காக இடம்பெற்ற கொடூர சம்பவம்...! மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

இலங்கையில் பணத்திற்காக இடம்பெற்ற கொடூர சம்பவம்...! மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

குருணாகல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் இன்றையதினம் (19-05-2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இலங்கையில் பணத்திற்காக இடம்பெற்ற கொடூர சம்பவம்...! மூவர் பரிதாபமாக உயிரிழப்பு | 3 Murder Same Family Were For Money In Sri Lanka

குறித்த சம்பவத்தில் 80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை மிதிவண்டியில் பயணித்த நபரை சோதனையிட்ட பொலிஸார், அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் பணத்திற்காக இடம்பெற்ற கொடூர சம்பவம்...! மூவர் பரிதாபமாக உயிரிழப்பு | 3 Murder Same Family Were For Money In Sri Lanka

இதனடிப்படையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்த கடிதங்களை பரிசோதித்த போது ​​கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.