நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரசாங்கம்

நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரசாங்கம்

கொரோனாவால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இன்று தெரிவித்துள்ளார்.

அந் வகையில் இலங்கைக்கு வர விருப்பமுள்ள வெளிநாட்டில் தங்கியுள்ள இலங்கையர்கள் நாளை முதல் மீண்டும் அழைத்து வரப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டுபாய் மற்றும் அபுதாபியைச் சேர்ந்த சுமார் 550 பேர் முதல் தொகுதியாக இலங்கைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக அவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரவித்துள்ளார்.

இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் அட்மிரல் ஜெயநாத் கொலம்பேஜ் கூறினார்.

அத்துடன், இலங்கை விமான நிலையத்தை வெளிநாட்டினருக்காக திறப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திகதியை தற்போது அறிவிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டும் என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் முன்னதாக அறிவித்திருந்தார்.

இலங்கையில் அண்மையில் கொரோனா தொற்று திடீரென அதிகரிப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து இலங்கையில் நிலைமை சீராகியதை அடுத்து மீண்டும் இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.