கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. மனம் திறந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது ஓய்வு பற்றி மனம் திறந்துள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் அதன் பின் கிரிக்கெட்டை விட்டு நீண்ட தூரம் சென்று விடுவேன் என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு விளையாட்டு வீரராக எங்கள் அனைவருக்கும் ஓய்வு காலம் என்பது நிச்சயம். என்னால் இறுதிவரை விளையாடிக் கொண்டே இருக்க முடியாது.
எந்த வருத்தமும் இன்றி விடைபெற வேண்டும் என நினைக்கிறேன். என்னுடைய முழு பலத்தையும் நான் விளையாட்டில் காட்டுவேன்.
இதேவேளை, நான் ஓய்வை அறிவித்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு நீங்கள் என்னை காண முடியாது!'' என தெரிவித்துள்ளார்.