மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்: காரணம் வெளியாகியது

மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்: காரணம் வெளியாகியது

குடும்பத்தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் கொழும்பு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசன் வீதியில், 31ஆவது தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குடும்பத் தகராறு காரணமாக கணவர் மனைவி தாக்குதல் மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கொலையை புரிந்தார் எனக் கூறப்படும் 39 வயதுடைய கணவர், கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

53 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை விசாரணையின் பின்னர் புறக்கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.