ஹிங்குரான பகுதியில் ஒருவருக்கு கொரோனா! அனைத்திற்கும் தடை விதிப்பு
ஹிங்குரான பகுதியில் வசிக்கும் கந்தகாடு மறுவாழ்வு மைய ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு இரண்டாவது தடவை முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதன் விளைவாக, அவரது நண்பர்களாக கருதப்படும் ஹிங்குரான பகுதியில் உள்ள ஒரு குழுவினரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும் அந்த பகுதிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று அப்பகுதியின் சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.
இருப்பினும், அருகிலுள்ள பகுதிகளில் அரசியல் பேரணிகள், கல்வி வகுப்புகள், திருவிழாக்கள் மற்றும் பிற பேரணிகளை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.