இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸிற்கு (Kusal Mendis) அமெரிக்கா வீசா மறுக்கப்பட்டமையினால் அணி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் குசலுக்கு அமெரிக்கா வீசா வழங்கப்படவில்லை என தெற்கு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளது.
வீசா பிரச்சினை காரணமாக முன்னணி துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் அணியுடன் பயணம் செய்யவில்லை.
வீசாவிற்காக விண்ணப்பம் செய்த போது ஏற்பட்ட குறைபாடு காரணமாக குசல் மெண்டிஸ் மற்றம் ஹசித பெர்னாண்டோ ஆகியோரது வீசா மறுக்கப்பட்டுள்ளது.
எனினும், ஹசிதவிற்கு மீளவும் விண்ணப்பம் செய்த போது அனுமதி வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.