O/L பரீட்சைக்கு சென்று மாயமான மாணவிகள் மிட்பு!
o/l பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் மாணவிகள் இருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் மாயமான மாணவிகள் உறவினர்களின் வீட்டிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன மாணவிகள் இருவரும் , பரீட்சைக்கு செவ்வாய்க்கிழமை (14) சென்றிருந்த நிலையில், கடுவெலவில் உள்ள உறவினர்களின் வீட்டில் இருந்தனர் என புதன்கிழமை (15) இரவு கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
வேலையை வாய்ப்பை தேடி இவ்விருவரும் கொழும்புக்கு சென்றதாகவும் , கடுவெல பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு புதன்கிழமை (15) இரவு சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடுவெல பிரதேசத்தில் இருந்து பாடசாலை மாணவர்கள் இருவரும் அவர்களின் உறவினர்களினால் கினிகத்ஹேன பொலிஸ் நிலையத்துக்கு இன்று வியாழக்கிழமை (16) அழைத்துவரப்பட்டனர்.
அதன் பின்னர் ச்மாணவிகள் இருவரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கினிகத்ஹேன பொலிஸார் தெரிவித்தார்.