விசேட சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட பலர் கைது!

விசேட சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட பலர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நச்சுத்தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 15 பெண்கள் உட்பட 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 பேர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 20 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட சுற்றிவளைப்பு: பெண்கள் உட்பட பலர் கைது! | Many Arrested Including 15 Women With Toxic Drugsமேலும் சந்தேக நபர்களிடமிருந்து 122 கிராம் ஹெரோயின், 151 கிராம் ஐஸ், 325 கிராம் கஞ்சா, 58 கிராம் ஹெரோயின் மற்றும் 280 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.