நுவரெலியா வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

நுவரெலியா வனப்பகுதியொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்

நுவரெலியா (Nuwara Eliya) லவர் சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, இன்று (14.05.2024) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் அங்க அடையாளங்களைக் கொண்டு 50 தொடக்கம் 60 வயதான நபரே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.