மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தொடருந்தில் பொத்தாதானை பிரதேசத்தில் மோதுண்டு ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளானர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இன்று (14) செவ்வாய்கிழமை காலை 06.10க்கு புறப்பட்ட உதேதேவி புகையிரத்தில் வாழைச்சேனைக்கும் புனானைக்கும் இடையில் காலை 07.20 அளவில் பொத்தானை தொடருந்து கடவையில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர் ஓட்டமாவடி காவத்தமுனை ஹிஸ்புள்ளாஹ் வீதியை வசீப்பிடமாக கொண்ட முஸ்தபா லெப்பை றம்ஸான் (வயது 39) என்பர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு - கொழும்பு தொடருந்தில் மோதுண்டு ஒருவர் படுகாயம் | One Injured In A Train Accident Colombo Batticaloaகாயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இவ் விபத்து தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.