தொடருந்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்து : ஒருவர் பலி

தொடருந்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்து : ஒருவர் பலி

பெலியத்தையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்து ஒன்றில் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காலி அருகே கொஸ்கொட, தூவேமோதர தொடருந்து குறுக்குக் கடவையில் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்தில் பயணித்த பெந்தோட்டை பிரதேச சபையின் பணியாளரான இந்துருவ பிரதேசவாசி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உழவு இயந்திரத்தின் சாரதி காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். லேண்ட் மாஸ்டர் உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர்.

தொடருந்துடன் உழவு இயந்திரம் மோதி விபத்து : ஒருவர் பலி | Plowing Machine With Train Accident One Is Victimதூவேமோதர பாதுகாப்பற்ற தொடருந்து கடவை ஊடாக பயணிக்க முனைந்த போது தொடருந்து வருவதைக் கண்ட இரண்டு பேர் பாய்ந்து தப்பியோடி உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவ இடத்தில் தொடருந்துக் கடவை அல்லது சமிக்ஞை விளக்குகள் இன்மையால் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.