காலாவதியான அரிசியை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முயன்றவர்கள் கைது

காலாவதியான அரிசியை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முயன்றவர்கள் கைது

காலாவதியான அரிசியை சுத்திகரித்து, அரசாங்கத்தின் பொதுமக்களுக்கான இலவச அரிசி விநியோகத்திட்டத்திற்கு வழங்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அநுராதபுரம் , கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

கொழும்பின் வர்த்தக நிலையங்களில் நீண்டகாலமாக தேங்கிக் கிடந்து காலாவதியான அரிசியைக் குறைந்த விலைக்குப் பெற்று, அதனை சுத்திகரித்து அரசாங்கத்தின் பொதுமக்களுக்கான இலவச அரிசி திட்டத்திற்கு விநியோகிக்க இவர்கள் முயற்சித்துள்ளனர்.

சுமார் 1,76,500 கிலோ பாவனைக்குதவாத அரிசி இவ்வாறு மீள் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலாவதியான அரிசியை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விநியோகிக்க முயன்றவர்கள் கைது | Those Tried Distribute Expired Rice Were Arrested