தாமரை கோபுரத்தில் நடைபெறவுள்ள சாகச நிகழ்வு!
கொழும்பு (Colombo) தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் (BASE jumping) எனும் சாகச நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.
இந்த சாகச நிகழ்வு நாளை (12) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 சர்வதேச பேஸ் ஜம்பர்கள் இந்த நிகழ்வில் திறன்களை வெளிப்படுத்துவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனை பார்வையிடுமாறு தாமரை கோபுர நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
பேஸ் ஜம்ப் சாகச நிகழ்வு நடைபெறவுள்ள நேர அட்ட அட்டவணை பின்வருமாறு,
- மே 12 - மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
- மே 13 - காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- மே 14 - காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை