வவுனியாவில் தகாத முறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி: பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

வவுனியாவில் தகாத முறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி: பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

வவுனியா-தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி ஒருவரை தகாத முறைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (11) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணைகளின் போது, வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்ற இளைஞர் போதைமருந்து கொடுத்து தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

வவுனியாவில் தகாத முறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி: பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது | Four Arrested Over Abuse 15 Year Old Girl Vavuniyaஇதனையடுத்து, சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிக்காட்டலில் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா காவல்துறையினர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் வுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியாவில் தகாத முறைக்குட்படுத்தப்பட்ட சிறுமி: பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது | Four Arrested Over Abuse 15 Year Old Girl Vavuniyaஇந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றர்.