
வீதியை விட்டு விலகி கவிழ்ந்த பேருந்து : பயணிகளின் நிலை ..!
பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு(ctb) சொந்தமான பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.
ஹங்குரன்கெத்தவிலிருந்து கண்டி(kandy) நோக்கிப் பயணித்த பேருந்தே மயிலாப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி இன்று (11) பிற்பகல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் கண்டி பொது வைத்தியசாலையிலும், ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் தலத்துஓயா காவல்துறை அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.