தொடருந்தில் மோதி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொடருந்தில் மோதி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த நான்கு மாதங்களில், நாற்பத்தி இரண்டு பேர் தலையை தண்டவாளத்தில் வைத்து, தொடருந்து மோதி, விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் தொடருந்து மோதி எண்பத்து நான்கு பேர் காயமடைந்ததாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விபத்துக்கள் மற்றும் தற்கொலைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொடருந்து மேம்பாட்டிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.

தொடருந்தில் மோதி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு! | People Killed In Train Collisions Is On The Riseகடந்த 2022ஆம் ஆண்டு தொடருந்து மோதி விபத்துகளில் சிக்கி 135 பேர் உயிரிழந்துள்ளதுடன் 254 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 2023ஆம் ஆண்டு தொடருந்து மோதி 148 பேர் உயிரிழந்துள்ளதுடன் 248 பேர் காயமடைந்துள்ளதாக தொடருந்து திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.