கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு: அறிவிப்பை வெளியிடவுள்ள சமரி அத்தபத்து
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சமரி அத்தபத்து(Chamari Athapaththu), விரைவில் ஓய்வு பெறப்போவதாக வெளியான செய்திகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விரைவில் ஓய்வு பெறும் திட்டம் உள்ளதா என்று அத்தபத்துவிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.
இதற்கு பதிலளித்த அவர், கருத்து தெரிவிக்க இது நேரம் இல்லை என்றும், இது குறித்து பின்னர் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.
ஸ்கொட்லாந்துக்கு எதிரான ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கையின் மகளிர் கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியது.
இந்த சுற்றுப்போட்டிகளில் சாமரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், பெண்கள் டி20 உலகக் கிண்ண ஏ பிரிவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இலங்கை இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.