மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: மாதாந்தம் வழங்கப்படவுள்ள நிவாரணம்

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: மாதாந்தம் வழங்கப்படவுள்ள நிவாரணம்

இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ இலவச அரிசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெறப்பட்ட பலத்த பாராட்டுக்கள் காரணமாகவே அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அதேவேளை, அண்மை காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை காசுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்திருந்தார்.

மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்: மாதாந்தம் வழங்கப்படவுள்ள நிவாரணம் | Good News For People Free Rice Once A Monthஇலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை இலக்காக கொண்டு இலவச அரிசி நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.