பிரதேசமொன்றில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: நாடாளுமன்றில் அம்பலம்

பிரதேசமொன்றில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: நாடாளுமன்றில் அம்பலம்

தமிழ் மொழி மூலம் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு இரத்தினபுரி பிரதேசத்தில் தகுதியான பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் காமினி வலேபொட (Gamini Waleboda) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை ஆகிய இரு நகரங்களிலும் தமிழ் மொழி மூல மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த அவர், இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பான பிரச்சினையை சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கு அனுப்பி இரண்டு வாரங்களுக்குள் தகவல் பெறப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கமைவாக தமிழ் ஊடக ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்காலத்தில் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேசமொன்றில் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: நாடாளுமன்றில் அம்பலம் | The Problem Faced By Tamil Studentsமேலும், புதிய பாடசாலை தேவையென்றால் அதற்கும் ஆலோசனைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.