மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம்

மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம்

வாத்துவ, மொல்லிகொட பிரதேசத்தில் ஏற்பட்ட தகராறில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (04-05-2024) பிற்பகல் வாத்துவ, மொல்லிகொட பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம் | Police Shot Husband Attack His Wife Drug Addicted

போதைப்பொருளுக்கு அடிமையானவர் என அடையாளம் காணப்பட்ட காயமடைந்த நபர், தனது மனைவியின் கழுத்தை கண்ணாடி பாட்டிலால் அறுத்து பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர், சந்தேக நபரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போதிலும் அவரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மனைவியை தாக்கிய கணவரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்! பரபரப்பு சம்பவம் | Police Shot Husband Attack His Wife Drug Addicted

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.