களுத்துறையில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!

களுத்துறையில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவன் கத்தியால் குத்திக் கொலை!

களுத்துறை (Kalutara) - பாணந்துறை (Panadura) பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் சிறுவன் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பழம் வெட்டும் கத்தியால் குறித்த சிறுவன் குத்தி கொலை செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இதன்போது பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் இசை நிகழ்ச்சிக்கு சென்ற சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! | A Boy Who Went To A Concert Was Stabbed To Death

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.