புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை

அமெரிக்காவில்(America) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு லொட்டரியொன்றில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.

லாவோஸ்(Laos) நாட்டை சேர்ந்த செங்சைபன்(46) என்ற நபர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 8 வருடங்களாக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தாலும், வாழ்வின் இறுதி கட்டங்களை எண்ணிக் கொண்டு இருந்துள்ளார்.

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை | 1 3 Billion Prize In Lottery For A Cancer Patientஇந்நிலையில், செங்சைபன் அமெரிக்காவின் ஒரேகான்(Oregon, USA) பகுதியில், பவர்பால் லொட்டரி ஒரு 100 டொலருக்கு லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு அந்த லொட்டரி சீட்டில் அமெரிக்க டொலர் மதிப்பில் 1.3 பில்லியன் டொலர்கள் கிடைத்துள்ளது, இது இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலானது என தெரிவிக்கப்படுகிறது.

புற்றுநோயாளருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் : தலைகீழாக மாறிய வாழ்க்கை | 1 3 Billion Prize In Lottery For A Cancer Patientஅத்தோடு, செங்சைபன் இந்த பணத்தை வைத்து தனக்கென வீடு ஒன்றை கட்டவிருப்பதாகவும் ஒரு பிரத்யேக மருத்துவரையும் நியமித்து தனது புற்றுநோயிலிருந்து விரைவில் குணமடையவிருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.