பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸில் (Philippines) உள்ள லெய்ட் மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் (EarthQuake) ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது, நேற்று (03.04.2024) மாலை 6.16 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் அதன் பின்னர் பல அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் கடலோர நகரமான துலாக்கில் இருந்து தென்கிழக்கே 32 கிலோமீட்டர் தொலைவில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லெய்ட் மாகாணத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.