யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் , பெண்ணின் வீட்டாருக்கும் மகளின் காதல் தொடர்பு தெரிந்து இருந்தமையால் , காதலி வீட்டிற்கு காதலன் சுதந்திரமாக வந்து செல்வதாகவும் தெரிய வந்துள்ளனது.

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு | Recovery Body Lover From Girlfriend S House Jaffnaஇந்நிலையில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலமாக காணப்பட்டதில் , தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக இளைஞனின் தாயார் மரண விசாரணையில் தெரிவித்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சுன்னாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.