கொழும்பு ஹோட்டல் கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
கொழும்பு நகர ஹோட்டல்களுக்கு அறிமுகப்படுத்திய குறைந்தபட்ச அறை கட்டணத்தை இரண்டு மாதங்களில் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ (Piriyantha Pernando) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும், கூறுகையில்,
"2023 செப்டெம்பரில், ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு (Colombo) நகர ஹோட்டல்களுக்காக இந்த நடைமுறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது
இதன்படி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு 100 டொலர், நான்கு நட்சத்திர ஹோட்டல்களுக்கு 75 டொலர், மூன்று நட்சத்திர ஹோட்டல்களுக்கு 50 டொலர், இரண்டு நட்சத்திர ஹோட்டல்களுக்கு 35 டொலர் மற்றும் ஒரு நட்சத்திர ஹோட்டல்களுக்கு 20 டொலர் என கட்டணங்கள் குறித்து வர்த்தமானியில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்து.
எனினும், குறைந்தக் கட்டணங்களுக்கான மறு அறிமுகம் தொழில்துறைக்குள் பிளவை உருவாக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எனவே, சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) கூறியது போல் ஓரிரு மாதங்களில் குறைந்தபட்ச அறை கட்டணங்களை ரத்து செய்வது குறித்து நாங்கள் பரிசீலிக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.