15 இலட்சத்து 8 ஆயிரம் பணத் தொகையினை வழங்குமாறு உத்தரவு

15 இலட்சத்து 8 ஆயிரம் பணத் தொகையினை வழங்குமாறு உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளPerpetual Treasuries Limited நிறுவனத்தின் உடனடி அபராத அமைப்பு கணக்கில் இருந்து 15 இலட்சத்து 8 ஆயிரம் பணத் தொகையினை, நிறுவனத்தில் நிதி முதலீடு செயத பெண் ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நதவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநருக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.குறித்த நிறுவனத்தில் முதலீடு செய்த பணத் தொகையினை நிலுவைத் தொகையாக பெற்றுக் கொள்ள இருந்தததாக குறித்த பெண் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார். Perpetual Treasuries Limited நிறுவன தலைவர் ஜெப்ரி எலோசியஸ் நீதிமன்றில் முன்னிலையாகி முதலீட்டாளரினால் முதலீடு செய்யப்பட்ட பணத் தொகை காலம் கடந்திருந்தால், குறித்த பணத்தொகையினை வழங்குவதில் ஆட்சேபனையில்லை என சட்டத்தரணி மூலம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பணத் தொகையினை குறித்த பெண்ணிற்கு வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதுஇதனிடையே குறித்த முறைப்பாடு மீண்டும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் முன்னேற்ற அறிக்கையினை சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.